Adsense

கவிதைகள்


ஏறக்குறைய காலி என்ற நினைத்த என்னுடைய external harddrive நான் பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பதாய் வேண்டிக்கொண்டதால் பிழைத்தது என்று நினைக்கிறேன். மற்றபடி இந்த hard drive repair எல்லாம் நமக்குத் தெரியாது.

நான் இதுவரை எழுதியவை, சேகரித்த தகவல்கள், இசை எல்லாம் போயே போச்சே (சூப்பர் அமிர்தாஞ்சன் விளம்பரம் - போன பதிவிற்காக தேடிய போது சிக்கவில்லை) என்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இங்கு சேமிக்கப் போகிறேன். கவிதையிலிருந்து துவங்குவதாக முடிவு.


இன்று காலை
சாலை விபத்தில்
இறந்தவன் - கபாலம்
பிளந்து தொங்கும் மூளையை
ஒரு கையில் பிடித்தபடி
என் வீட்டுக் கதவு தட்டி
குடிக்கத் தண்ணீர் கேட்கிறான்.
எதேச்சையாய் சாலையில்
தென்படும் பாடையில்
கோடித் துணிப் போர்த்தப்பட்ட
சவத்திற்கு என்
நன்பனின் முகம்.
ஆடு காவு கேட்ட
ஆத்தா இப்போது நரபலி
கேட்டதால் கையில்
அரிவாளுடன்
என்னைத் துரத்துகிறான்
ஒரு பூசாரி.
எதோ ஒரு அருவியில்
குளிக்கும் என்மேல்
தண்ணீருடன் வந்து
விழுகிறன்றன அழுகிய
பிணங்கள்.
சிலிர்த்தெழும் இத்தருணங்களில்
என்னுடலின் ஊசிமுனை
துவாரங்களிலிருந்துப் பிதுங்கி
வழிகின்றது
என்னை நிரப்பியிருந்த
மரணத்தின் பயம்.

No response to “கவிதைகள்”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman