Adsense

வாங்க கொஞ்சம் பின்னோக்கி முன்னேறலாம்


நீங்கள் இந்த பதிவை பார்க்க சில அடிப்படை தகுதிகள் தேவை. கீழ்காணும் ஐந்து சொற்தொடர்களில் எவையேனும் மூன்றிற்கு நீங்கள் ஆம் என்று சொல்வீர்கள். இல்லையேல் இந்த பதிவில் இருக்கும் எந்த வீடியோவையும் நீங்கள் பார்க்க கூடாது (கண்களை மூடிக்கொள்ளவும்) :-)

1) உங்களுக்கு ரினி கண்ணா என்பவரும் ரினி சைமன் என்பரும் ஒருவரே என்றும் அவர் யார் என்றும் தெரியும்
2) "தடங்கலுக்கு வருந்துகிறோம்", LPT போன்ற வார்த்தைகளை கேட்டால் நீங்கள் indifferent-ஆக இருக்க மாட்டீர்கள்
3) The zing thing என்பது அர்த்தமற்ற வாக்கியமாக உங்களுக்குத் தோன்றாது
4) "Secret of the sea", "Didi's Comedy show" இதையெல்லாம் ஒரு முறையாவது பார்த்திருப்பீர்கள்
5) இந்த பதிவு படித்த பின் ஒரு ஐந்து நிமிடம் யாருடனும் பேசாமல் மையமாக புண்ணகைத்துக் கொண்டு இருப்பீர்கள்

இது ஏறக்குறைய தேசியகீதம் போல - இந்த தேசிய ஒருமைப்பாட்டு பாடல் போல் இன்றைய தேதி வரை தொலைக்காட்சி ஊடகத்தில் வேறு இல்லை என்று அடித்து சொல்வேன்பழைய வீகோ டர்மரிக் விளம்பரம் - இதில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா ?கோல்ட் ஸ்பாட் - கோடி ருபாய் கொடுத்தாலும் இப்போ கிடைக்காது.என் அப்பா வைத்திருந்த பஜாஜ் கப் (3 கியர்) ஸ்கூட்டர்பழைய ரஸ்னா விளம்பரம் - I love you Rasna


ஏறக்குறைய எல்லா திரைப்படங்களுக்கு முன்பும் இந்த விளம்பரத்தை காண்பிப்பார்கள்

9 Responses to “வாங்க கொஞ்சம் பின்னோக்கி முன்னேறலாம்”

அட.. நா ரொம்ப சின்ன வயசுல பாத்த விளம்பரங்கள்.எளிமையா இருந்தாலும்,அருமையா இருக்குதில்ல?....
ரொம்ப நல்லாயிருக்கு உங்க அஞ்சறைப் பெட்டி..வாழ்த்துக்கள்.

Bee'morgan said...

ஹா.. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே னு பாடத்தோணுது.. :-) சொல்லப்போனா, இதே மாதிரி, நினைவில் நிற்கும் அந்த நாள் விளம்பரங்கள் பற்றி ஒரு பதிவிட எண்ணியிருந்தேன். நீங்கள் செய்துவிட்டீர்கள். அப்படியே, ஒரு நேயர் விருப்பம்.. பஜாஜ் M80 விளம்பரம் ஞாபகம் இருக்கா.. "இவர்தான் நிருபர் வீர பத்ரன்.." அப்டீனு ஆரம்பிக்கும்.. முடிஞ்சா அதையும் சேருங்களேன். :o)

icarus prakash said...

//இந்த பதிவு படித்த பின் ஒரு ஐந்து நிமிடம் யாருடனும் பேசாமல் மையமாக புண்ணகைத்துக் கொண்டு இருப்பீர்கள்//

இந்த அஞ்சாவது பாய்ண்ட் மட்டும் தப்பு. புன்னகை எல்லாம் இல்லே... கண்ல தண்ணி. கெரவத்த விடுங்க... சுத்தமா தேவை இல்லாத மேட்டருக்கு மட்டும் தான் நான் இப்படி எமோசனல் ஆவறது வழக்கம்.

Sorry Beemorgan - அந்த வீரபத்ரன் மேட்டர் மட்டும் என் கண்ல தட்டு படல. நானும் நல்லா அலசிட்டேன்.

ரசிகன், பிரகாஷ் - பெட்டியை திறந்து பார்த்ததுக்கு நன்றி. எனக்கும் இந்த nostalgia feeling கொஞ்சம் அதிகம் தான். :-)

Bee'morgan said...

நன்றி கிருஷ்ணன்.. நானும் கொஞ்சம் தேடிப் பாக்கறேன்.. கிடைத்தால் சொல்கிறேன்..

essusara said...

arumai palaya ninaivugal mella ettiparthathu.
kalam marinalum sila ninaivugal neengathavai.

nandri veliyitathiruku

sara

essusara said...

arumai palaya ninaivugal mella ettiparthathu.
kalam marinalum sila ninaivugal neengathavai.

nandri veliyitathiruku

sara

Manivasagan said...

A good collection. I remember all those things, sliding behind in the chair..

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman