Adsense

கவிதைகள் 2


கேட்கப்படாத கேள்விக்கு
பதிலாகவும்
விளங்கிக் கொள்ளப்படாத
விளக்கமாகவும்
பாதிதூரம் பயணித்துவிட்டு
பெருவெளியில் மங்கிப்போகும்
சொற்களின் பிரசவத்தில்
இறக்கும் என்னை
இரச்சலின்றி சுமந்து செல்லுமென்
நிச்சலன மெளனம்
தன்னைத் தானே
எழுதிச் செல்லும் ஒரு
கவிதையின் துணையுடன்

-------@@@@-------

நம்மிடையே இருந்த
கண்ணாடித்திரைக்கு
பலமாக சாயம் ஏற்றிவிட்டிர்கள்
என் மீதான உங்கள்
நம்பிக்கைகளை பல
வண்ண வார்த்தைகளாக
திரை நோக்கி எறிவதன் மூலம்
இப்போதும் வண்ணங்களின் ஊடே
நீங்கள் காணும் என் பிம்பம்
நோக்கி எறிந்து கொண்டிருக்கிறீர்கள்
என் குறித்த விமர்சனங்களை -
திரைக்கு அப்பக்கத்திலிருந்து
நான் எப்போதோ மறைந்திருந்தேன்

-------@@@@-------


மேகங்கள் நிறைந்த இந்நகரமெங்கும்
மனதை பாதிக்காது நிற்கின்றன
இலைகளில்லா மரங்கள்
கடந்து போன இலையுதிர்
காலத்தின் சாட்சியாய்.
உறைந்து போன நீர் நிலையின்
பனிப்பிளவுகளில்
மீனுக்காய் அலையும் பனிக்கரடியின்
தேடல் நிகழ்கால நிதர்சனம்
பிரபஞ்ச தாக்கங்களை
உள்வாங்கிக்கொண்டு சலனமின்றி
நகரும் மனிதமுகங்களை
எப்படி எதிர்கொள்வது ?

-------@@@@-------

No response to “கவிதைகள் 2”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman