Adsense

என்ன கொடுமை சார் இது?


ஒரு மாநிலத்தின் செயல்பாடுகள் முடக்கப்படுகிறது, அதுவும் அந்த மாநிலத்தின் ஆட்சியாளரின் தன்னிச்சையான செயல்பாடுகளால். சுப்ரிம் கோர்ட் பந்த்-க்கு தடை விதித்தும். சுப்ரிம் கோர்ட்டின் உத்தரவை நான் மீறவில்லை என்கிறார் கருணாநிதி. அப்படியானால் ஏன் வாகனங்கள் ஓடவில்லை ? செயல்பாடுகள் ஏன் முடக்கப்பட்டிருக்கின்றன ? சரி சுப்ரிம் கோர்ட்டின் உத்தரவை மீறவில்லை என்றே வைத்துக் கொள்வோம். சரி பந்த் இல்லை இது உண்ணா நோன்பு என்றே வைத்துக் கொள்வோம். திரிபாதி 16,000 பேருந்த்களில் 61 மட்டுமே ஓடுவதாக கூறுகிறார். ஒரு கட்சி சாந்த போராட்டத்தால் எதற்காக பொது வாழ்வு பாதிக்கப் பட வேண்டும்? விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏன் ? பஸ்கள் ஓடாததால் மாநில அரசுக்கு ஏற்பட்ட நஷ்ட கணக்கை யார் ஏற்பது. இது திமுக என்ற கட்சி நடத்தும் ஸ்டிரைக் என்றால் பஸ்கள் ஓடாததால் ஏற்பட்ட நஷ்டத்தை அந்த கட்சி கொடுக்குமா ? அப்படி ஈடு கட்ட முடியாவிட்டால் மக்களில் வரியில் கை வைக்காமல் இந்த நஷ்டத்தை ஈடு கட்ட என்ன திட்டம் வைத்திருக்கிறது இந்த அரசு. சரி, பேருந்து ஓடாமல் இருப்பதற்கு அரசு எந்த விதத்திலும் பொறுப்பில்லை – ஊழியர்கள் வேலைக்கு வராததே காரணம் என்றே வைத்துக் கொள்ளலாம். இவ்வளவு மகத்தான சேதத்தை ஏற்படுத்திய அந்த அரசு ஊழியர்கள் மீது இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கும் ? சட்டத்துறை தவறுகளுக்கு அப்பாற்பட்டதில்லை என்கிறார் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு. எவ்வளவு தவறான முன்னுதாரணம் !! இந்த கூத்துக்கு முத்தாய்ப்பாக பேசுகிறார் பிரிய ரன்ஜன் தாஸ் முன்ஷி. இன்னும் கூட்டணி கட்சி தலைவரிடமிருந்து எந்த கருத்தும் வரவில்லை.

ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல், மதுரை இடைதேர்தல் என்று பல சமயங்களிலும் தங்கள் சட்ட ஒழுங்கை இந்த அரசு நிறுபித்தும் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறார் கவர்னர். அவரை சொல்லியும் எந்த தப்புமில்லை. முன்னர் அன்றைய சந்திரசேகர் அரசு திமுக ஆட்சியை கலைத்த போது தனது பதவியை ராஜினாமா செய்தவரிடமிருந்து வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது.

இதெல்லாம் கூட பரவாயில்லை. இந்த உண்னா நோன்புக்கு அடிப்படை காரணம் என்ன என்று முன்னுக்குப் பின் முரணில்லாமல் இந்த ஆட்சியாளர்கள் தெளிவாக சொன்னால் கூட போதும். அதை ஹிந்தியில் சொல்லாமல் தமிழில் சொன்னால் தெளிவாக புரிந்து கொள்ள உதவும்.

தமிழ்நாட்டை இன்னொரு பீகாராக ஆக்காமல் ஓயமாட்டார்கள் போலும்.

No response to “என்ன கொடுமை சார் இது?”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman