Adsense

It happened in India - ஒரு அறிமுகம்


நேற்று முன் தினம் மும்பாய் சென்று விட்டு சென்னை திரும்பிய போது விமானத்திற்கு நான்கு மணி நேரம் முன்பே ஏர்போர்ட்டுக்கு சென்று விட்டேன். பொழுது போகாததால், அங்கே இருந்த ஒரு புத்தகக் கடையில் சல்லீசாக ஏதாவது பொழுதை ஓட்ட தட்டுப்படுமா என்று தேடிக்கொண்டிருந்த போது தான் என் கண்ணில் பட்டது "IT happened in India”. இதை நான் வாங்க முக்கியமான காரணம் கிஷோர் பியானி பிக் பஸாரை எப்படி சில்லறை வர்த்தகத்துறையின் முன்னோடியாக்கினார் என்று அறியவேண்டிய அறிவுப்பசியோ நாளைக்கு தொழில் முணைய வேண்டிய நிலைக்கு தயார் படுத்திக் கொள்ள வேண்டிய ஆர்வமோ இல்லை. நான்கு மணி நேரத்தை கழிக்க வேண்டிய கட்டாயமும் 99 ரூபாய்க்கு குறைவாக அந்த புத்தகக் கடையில் வேறு எந்த புத்தகமும் விற்கப்படவில்லை (மாத, வார இதழ்களைத் தவிர்த்து) என்பவை தான் நான் இந்த புத்தகத்தை வாங்க என்னைத் தூண்டியவை.
கிஷோர் பியானியின் இந்த சுயசரிதையில் அவரைச் சுற்றி இருந்தவர்கள், கூட கல்லூரி நாட்களில் படித்தவர்கள், மனைவி முதலான சொந்தங்கள் கிஷோருடனான அனுபவங்களைப் பற்றி பேசி இருக்கிறார்கள். வாசிக்க மிகவும் எளிமையாக சிக்கலற்று இருக்கிறது. ஒரு தொழில் முனைபவருக்கு ஏற்படும் சகல விதமான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார் கிஷோர். அதிக நகைச்சுவை உணர்வோ இப்போது எழுதப்படும் சில சுயசரிதைகளில் தென்படும் நாடகத்தனமான வார்த்தை அமைப்புகளோ இல்லாமல் சாதரணமாக நேரிடையான உரையாடல் அனுபவத்தைத் தோற்றுவிப்பது இந்த புத்தகத்தின் வெற்றி என எனக்குத் தோன்றுகிறது. இந்த புத்தகம் நிச்சயம் அடுத்த பக்கதிற்கு என்னை கடத்திக் கொண்டு சென்றது என்றே சொல்வேன்.
கிஷோரை உள்ளுனர்வை அதிகம் நம்பி முடிவு எடுக்கும் ஒரு நபராக, அல்லது அவரது முடிவின் மூல காரணத்தை யாராலும் அது வெற்றி பெரும் வரை நம்ப முடியாமல் இருப்பது போன்ற தோற்றத்தை இந்த புத்தகம் முழுவதும் ஏற்படுத்துகிறார்கள். ஒரு சாதாரண மார்வாடியாக வாழ்க்கையைத் துவக்கி ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவராக அவரது வளர்ச்சியை மிகவும் அழகாக அடுக்குகிறார்கள். வாடிக்கையாளர்களை எப்படி பிடிப்பது என்பது முதல், அவர்களிடன் தேவை அறிந்து business model-ஐ வடிவமைக்க வேண்டியதின் அவசியத்தையும் அழகாக சொல்கிறார்.
முதன் முறை தொழில் துவங்க முயற்சிப்போருக்கு இந்த புத்தகம் நிச்சயம் ஒரு தன்னம்பிக்கை அளிக்கும் புத்தகம் - இந்த புத்தகத்தின் நோக்கமும் அதுவே என முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிக் பஸாரில் விற்கப்படும் பொருட்களைப் போலவே இதுவும் சல்லிசாக கிடைப்பதால் என் ஒரு வரி விமர்சனம் - Value for money.

One response to “It happened in India - ஒரு அறிமுகம்”

Cool da KC. photo kalakkal! BTW, this post alone is not displaying properly in Firefox 2.0.x - as if text-align and text-justify are enabled!

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman