Adsense

Google தொடர்பாக 2 கேள்விகள்


" சரி சந்துரு.. ஆனால், இப்படி கூகிள் எல்லாரையும் ஸ்வாஹா பண்ணிகிட்டே போறது நமக்கு நல்லதுன்னு நினைக்கிறீங்களா? "

இந்த கேள்வியை கில்லியில் பிரகாஷ் கேட்டிருந்தார். இந்த கேள்வி இரண்டு கேள்வியா அல்லது ஒரே கேள்வியா என்று எனக்குத் தெரியவில்லை.
இரண்டு கேள்விகள் என்று எடுத்துக் கொண்டு பதில் சொல்ல முயல்கிறேன்.


1) கூகிள் இப்படி ஸ்வாஹா பண்ணிகிட்டே போறது நல்லதா ?
நல்லது கெட்டது என்று முடிவாக சொல்ல முடியுமென்று தோன்றவில்லை. இந்த வகையான consolidation pattern-ஐ நான் IT-இன் பல துறைகளிலும் பார்க்கலாம். உதாரணத்திற்கு நான் கவனித்த இரண்டு ஏரியாக்கள்; IT service & Packages solutions
ஏகப்பட்ட சேவை நிறுவனங்கள் வாங்குகின்றன அல்லது வாங்கப்படுகின்றன. பெரிய ஆளாக இரு அல்லது பெரிய ஆளோடு சேர் என்பது தான் இன்றைய நிலை. உதாரணத்திற்கு நான் கடந்த சில மாதங்களாக குறிப்பெடுத்துக் கொண்டுள்ள சில குறிப்பிடத் தக்க acquisitions
TCS acquired Comicrom
Capgemini acquired Kanbay
ATOS origin acquired UniMedicine
Hexaware acquired focusframe
இதை விட பல மடங்கு acquisitions நடப்பது package applications ஏரியாவில் தான. ஆரக்கிள் சரமாரியாக கம்பெனிகளை வாங்கித் தள்ளுகிறது. ஆரக்கிள் வாங்கிய கம்பெனிகளில் குறிப்பிடத்தக்கவை
Peoplesoft
i-flex
Siebel systems
Hyperion
Agile software solutions
கூகிள் மேட்டருக்கு வருவோம். Google மட்டும் சாதாரண ஆளில்லை. அது ஆரம்பித்த சில காலத்திலிருந்தே கம்பெனிகளை வாங்கி அதன் மூலம் தன் எல்லைகளை விரிவு படுத்திக் கொண்டே வருகிறது. சின்ன சின்ன features-ஐ கொடுக்கும் கம்பெனிகள் முதல் மிகப்பெரிய capability வரை google வாங்குகின்றது. Google-இன் இணையத்தில் ஏறக்குறைய மஹாராஜாவாகவே இருந்தாலும் Google-இன் இலக்கு இணையத்தையும் தாண்டியது. அவர்கள் டெஸ்க்டாபில் வழங்கப்படும் சேவைகளையும் வலையேற்ற துவங்கிவிட்டார்கள். ஏற்கனவே desktop search அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கிறது. அவர்களின் google apps இன்னும் சில வருடங்களில் மிகப்பெரிய அளவில் வளரும் என்று நான் நம்புகிறேன். அப்போது நீங்கள் ஒரு file-ஐ உங்கள் சர்வரில் அப்டேட் செய்து விட்டு தூங்கப் போய் விடலாம். உங்கள் கம்ப்யூட்டரே சேரவேண்டியவர்களுக்கு சேர்பித்துவிட்டு அவர்களிடம் இருந்து review comments-ஐயும் வாங்கி உங்கள் inbox-இல் வைத்து விட்டு நீங்கள் login செய்வதற்காக காத்து இருக்கும். இப்போது google apps-இல் வழங்கப்படும் spreadsheet-க்கான டெக்னாலஜி 2web technologies என்ற நிறுவனத்தை acquire செய்த்ததால் பெறப்பட்ட டெக்னாலஜி (எனக்கு இந்த நிறுவனத்தின் பெயர் நிச்சயமாக தெரியவில்லை) . இதனால் போட்டி நிறுவனங்களுக்கு நிச்சயம் ஆபத்து தான். ஆனால் பயனாலர்களுக்கு நிச்சயம் எந்த கெடுதலும் இல்லை. இந்த acquisition-ஆல் அதிகப் பயன் பெருபவர்கள் marketing professionals. ஏனென்றால், Google என்ற ஒரே கடையில் அவர்களுக்கு ஆன்லைனில் விளம்பரப்படுத்துவதற்கான எல்லா சேவைகளும் கிடைக்கும். தனித் தனியே போய் அலைய வேண்டிய அவசியம் இல்லை. Google-இன் இந்த வேட்டை இன்னும் தொடரத் தான் செய்யும். ஏனென்றால், என்னைப் பொருத்த வரை அவர்கள் போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது.

2) நமக்கு நல்லதா ?
இந்த இடத்தில் தான் எனக்குக் குழப்பமே ஆரம்பிக்கிறது. அவர் பிளாக் எழுதுபவர்களை சொல்கிறார் என்று நினைக்கிறேன். Google இப்படி எல்லோரையும் வளைத்துப் போட்டுவிட்டு ஒவ்வொரு சேவைக்கும் காசு வாங்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால் ஃபீட் பர்னர் ஏற்கனவே இலவசமாக வழங்கப்பட்ட ஒரு web 2.0 சேவை தான். Google-இன் நோக்கம் முற்றிலுமாக web 2.0 compliant சேவை வழங்க வேண்டும் என்பதும், அதை மைக்ரோசாஃப்டுக்கும் யாஹூவுக்கும் முன்பாக வழங்க வேண்டும் என்பதுமே ஆகும். மேலும் “doubleclick”-ஐ வாங்கியதன் மூலம் online advertising-இல் மைக்ரோசாஃப்டையும் யாஹூவையும் விட பல மடங்கு முன்னேறிவிட்டது.
வலைபதிவர்களுக்கு இந்த நிகழ்வுகளால் என்ன நன்மை - சேவைகள் ஒருங்கினைக்கப்படுகின்றன. இன்னும் கொஞ்ச நாளில் blogger-உடன் feedburner இணைக்கப்பட்டு விடும். பின்வரும் நாட்களில் இந்த செய்தி ஓடைக்கான செவையை blogger அல்லாத மற்ற blogging platform (yahoo, typepad....) இந்த சேவையை எப்படி பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கொடுக்கப் போகிறார்கள் என்பது google-இன் sales strategy யை பொருத்தே இருக்கும். ஆனால், இதனால் பயனாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காதென்றே தோன்றுகிறது. ஒருவேளை, அந்தந்த blogging platforms செய்தி ஓடைக்கான சேவையை google-இடம் unlimited user license-ஆக வாங்கி அதன் பயனாளார்களுக்கு இலவசமாக தரலாம். அல்லது google இந்த செய்தி ஓடையை இப்போது இருப்பது போலவே இலவச சேவையாகவே வழங்கி விடலாம். இதன் மூலம் google customer loyalty-ஐ அதிகம் பெற முடியும். இந்த திசையில் தான் இன்னும் இந்த துறை பயணிக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. இன்று நாம் பார்த்துக் கொண்டிருப்பது இணையத்தின் பரிணாம வளர்ச்சி. படிப்படியாக தகவல் பரிமாற்றம் இலகுவாகிக் கொண்டிருப்பதை தான் நாம் பார்க்கிறோம். இனி வரும் காலங்களில் இன்னும் இலகுவாகும்.
Gmail-இன் வரவுக்கு முன் மின் மடலுக்கு யாஹூவின் வெப் இண்டர்ஃபேசையும் அரட்டைக்கு யாஹூவின் மெசெஞ்சரை தனியாக டவுன்லோட் செய்து கொண்டு தான் இருந்தோம் (பெரும்பான்மையானவர்கள் யாஹூவில் இருந்து இன்னும் முழுமையாக வெளியேறவில்லை). அதற்கும் முன் ஹாட்மெயிலின் அந்த 2 mb ஸ்பேஸை சேமிக்க தனியாக அவுட்லுக் எக்ஸ்பிரஸில் கான்ஃபிகர் செய்து கொண்டிருந்தோம். அந்த மடல்களை டெஸ்க்டாபில் டவுன்லோட் செய்த பின் சர்வரில் ஹாட்மெயில் டெலிட் செய்து விடும். தகவல்கள் பரிமாறிக் கொள்வதிலும் சிக்கல், சேமிப்பதிலும் சிக்கல். இந்த நிலை கொஞ்சம் மாறியது யாஹூவால். ஆனால் யாஹுவின் சேவைகள் ஒருங்கினைக்கப்படவில்லை. இந்த நிலையை தான் கூகிள் மாற்றியது. அரட்டை, மின் அஞ்சல், இணைய தேடல் என இணையத்தில் ஒருவர் செய்யும் எல்லாவற்றையும் ஒரே அப்ளிகேஷனில் standardized interface-இல் கொண்டு வந்தது. இப்போது இதே திசையில் யாஹூவும் மெசெஞ்சரை ஈ மெயில் இண்டர்ஃபேசுடன் இணைத்து விட்டது. உண்மையில் இது கூகிளின் செயல்பாடு மட்டுமல்ல. இந்த திசையில் தான் enterprise computing-உம் பயணித்தது. Google அந்த திசையில் சேர்ந்து பயணித்தது.
மைக்ரோசாஃப்ட் COM/ DCOM கொண்டு distributed applications செய்து அதன் வாயிலாக தகவல்கள் பரிமாற்றத்தை இலகுவாக்கியது. அந்த protocolகள் கொண்டு windows platform-இல் மட்டுமே தகவல்கள் பரிமாறிக் கொள்ள முடிந்தது. மைக்ரோசாஃப்ட் DCOM வழியாக windows-க்கும் non windows-க்கும் தகவல் பரிமாறிக்கொள்ள முடியும் என்று சொன்னாலும், எந்த enterprise-உம் அந்த ரிஸ்கை எடுத்ததாக எனக்குத் தெரியவில்லை. இதற்குப் பின் ஜாவாவின் வழியாக platform independent communication சேனல்கள் வந்தன. இதன் பின் SOAP உபயோகித்து HTTP வழியாகவே வெவ்வேறு பிளாட்ஃபார்மில் இருக்கும் systems தகவல்கள் பறிமாறிக்கொள்ளும் நிலை வந்தது. அந்த இடத்திலிருந்து தான் web services ஆரம்பித்தது. அதாவது சேவைகளை இணையத்தின் வழிகாகவே தருவது. நாம் பயன்படுத்தும்/ பேசிக்கொண்டிருக்கும் feedburner அவ்வாறு வழங்கப்பட்ட ஒரு web service தான். இனிமேலும் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு இந்த web service விஸ்வரூபம் கண்டிருக்கும். இப்போது web 2.0 என்ற திசையை நோக்கி இணைய உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் போது தகவல்களை பலரும் தேடிப் பெரும்படி இல்லாமல் ஒரு முறை subscribe செய்தவுடன் தகவல்கள் அவர்களைத் தேடி வரும் படியான வகையில் வடிவமைக்கப்பட்டதே இந்த சேவை. மேலும் இந்த செய்தி ஓடைகளை தேடு பொறிகளும் பெற்று அதன் index களை அப்டேட் செய்து கொள்ளும். கூகிள் ஒரு search engine நிறுவனமாக இருப்பதால் எனக்கு இந்த acquisition logical-ஆகவே படுகிறது. இதனால், மைக்ரோசாஃப்ட், யாஹூ மற்றும் கூகிளுக்கு இடையே இன்னும் போட்டி அதிகமாகும்.
கூகிள் என்னைப் பொருத்த வரை மிகவும் முன்னோடிகளாக இருக்கிறார்கள். ஆனால், கூகிளால் தனியே இந்த இணையத்தை ஆள முடியாது – ஆள மைக்ரோசாஃப்ட்டும் யாஹூவும் விடவும் மாட்டார்கள். போட்டி அதிகமாக முத்தி ஒரு கட்டத்தில் மூவர் இருவர் ஆகக் கூடும் ! ஆனால் அதற்குள் மற்ற இருவரும் இன்னும் அதிக உயரத்திற்கு போக வேண்டும்.

காசுள்ள பிள்ளை பிழைக்கும் !

No response to “Google தொடர்பாக 2 கேள்விகள்”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman