Adsense

ஆரம்பிச்சுட்டாங்கய்யா... ஆரம்பிச்சுட்டாங்க !


சமிபத்தில் தகவல் தொழில் நுட்ப துறை வளர்ந்த அளவுக்கு, இந்தியாவில் வேகமாக வளர்ந்த இன்னொரு துறை - விமான துறை. அதுவும் குறைந்த கட்டணத்திற்கான சேவை அளிக்கும் விமான நிறுவனங்கள் வந்த பின் பல மாற்றங்கள் கண்டிருக்கிறது இத்துறை. 2012-இல் இத்துறையில் செய்யப்பட இருக்கும் முதலீட்டின் மதிப்பு ஏறக்குறைய $ 30 பில்லியன் என்று மதிப்பிடப்படுகிறது. டெக்கான் ஆரம்பித்த ஏர்லைன் மூன்றே ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மார்க்கெட் ஷேரைப் பிடித்து பலரின் புருவத்தை உயர்த்தியது. மேலும் குறைந்த கட்டண சேவை அளிக்கும் விமான நிறுவனமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் டெக்கானின் சேவை பற்றிய பல குறைபாடுகள் மிகப்பரவலாக இணையத்திலும் பொதுவிலும் வைக்கப்பட்டு இருக்கின்றன. (நான் ஒரு முறை ஹைதராபாத் செல்ல டெக்கானில் புக் செய்து விட்டு பட்ட அவஸ்தை எனக்கு தான் தெரியும் - இவர்கள் நடு வானிலிருந்து மெகா சைஸ் பலூன் ஒன்றை பாராசூட் போல கட்டி இறக்கி விட்டு விடுவார்களோ என்று பயந்து கொண்டே சென்றேன்) உண்மையில் சொல்ல போனால் - “Low cost Airline” என்ற கான்செப்ட் மக்களுக்கு தெளிவாக புரிபடவில்லை என்றே தோன்றுகிறது. ஏன் நீங்கள் தண்ணீருக்கு கூட ஏரோப்ளேனில் காசு வாங்குகிறீர்கள் என்று ஒருவர் பணிப்பெண்ணிடம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார். டெக்கான் போன்ற விமான சேவைகளில் உங்களுக்கு கிடைக்கக் கூடியது

 • இந்தியா போன்ற அதிக பரப்பளவு அற்ற நாடுகளில் அதிகபட்ச தொடர் பயண நேரம் 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே. இந்த பயண தொலைவில் தேவையற்ற சேவைகளை (இன் ஃப்ளைட் சர்வீஸ்) எடுத்து விட்டு அத்தியாவசியமான சேவைகளை அளிப்பதன் மூலம் செலவை கட்டுப்படுத்தி அதன் மூலம் வரும் ஆதாயத்தை பயணிகளுக்கு கொடுப்பது
 • புக்கிங் வசதிகளில் அதிக செலவு பிடிக்காத முறைகளை கையால்வதன் (SMS, Internet booking – Reliance Webworld has a strategic partnership with Deccan airlines ) மூலம் செலவுகளை கட்டுப்படுத்தி அதன் மூலம் வரும் ஆதாயத்தையும் பயணிகளுக்கு கொடுப்பது

டெக்கான் ஏர்லைன் மார்க்கெட்டில் பிக் அப் ஆனதற்கு காரணமே இது தான். இதன் முக்கிய இலக்கு ட்ரெயினில் 2nd AC மற்றும் 1st AC யில் பயணம் செய்யும் மக்கள் தான். இத்தோடு "common man” கதையையும் சேர்த்து செண்டிமெண்டாக அடித்து விட்டார் கேப்டன் கோபிநாத்.


ஆனால், இது ஒரு புறம் இருக்க டெக்கான் ஏர்லைனின் மிகப்பெரிய குறைபாடு அதன் "Punctuality”. உங்களுக்கு ஏரோப்ளேன் கிளம்ப வேண்டிய நேரம் மாலை 6:30 என்றால் - நீங்கள் தைரியமாக உங்கள் வீட்டை விட்டு (வீடு சென்னையில் எங்கு இருந்தாலும்) மாலை 7 மணிக்கு கிளம்பினால் போதும். இதன் காரணம், டெக்கான் போன்ற குறைந்த கட்டண சேவை தரும் நிறுவனங்களின் தத்துவம் "Maximum utilisation of available resources”. பெங்களுரூக்கு செல்ல வேண்டிய விமானம் மதுரையிலிருந்து வந்து இறங்கிய பின்னரே பெங்களூருக்கு செல்ல வேண்டி இருக்கும். பெங்களூருக்கு என்று தனியே விமானத்தை இயக்க முடியாது. அப்படி இயக்கினால் அவர்களால் அத்தனை குறைந்த கட்டணத்தில் சேவை வழங்க இயலாது.


இப்படி செயல் படுவது ஒரு புறம். இன்னொரு புறம் இருப்பவர்கள், இந்த துறையில் மார்க்கெட் முன்னோடிகளாக இருக்கும் இந்தியன் ஏர்லைன்ஸ் (famous for Indian பாட்டிகள்), ஜெட் ஏர்வேஸ் மற்றும் புது போட்டியாளர் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ். உண்மையில் இந்த துறை வல்லுனர்கள் பொதுவாக இந்தியன் ஏர்லைன்ஸ், ஸ்பைஸ் ஜெட் ஆகியவற்றை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வதில்லை. அவர்கள் அதிகமாக கவனிப்பது ஜெட், கிங் ஃபிஷர் மற்றும் டெக்கானைத் தான் - ஏனென்றால் “Rules of the game”-ஐ மாற்றக்கூடியவர்கள் இவர்கள் தான்.

 • இந்தியன் ஏர்லைன்ஸ் தனக்கே உரிய மிக மந்தமான முறையில் செயல் பட்டுக் கொண்டிருந்த சமயத்தை மிகவும் சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்டு மார்கெட்டை கைப் பற்றியது ஜெட் ஏர்வேஸ். இதன் தத்துவமும் மிகவும் எளிமையானது - “கைல காசு வாயில தோசை". ப்ரீமியம் செக்மெண்டில் கொடுக்கும் காசுக்கு ஏற்றபடி சேவைகள் கிடைக்கும். இன்றும் இதே தத்துவத்தை தான் இவர்கள் பின் பற்றுகிறார்கள்
 • டெக்கான் ஏர்வேஸ்-இன் வருகையும் வளர்ச்சியும் இந்தியாவில் குறைந்த கட்டண சேவைகளுக்கான வரவேற்பை மிக கச்சிதமாக பிரதிபலித்துவிட்டது.
 • டெக்கான் ஆரம்பித்து ஒரு வருடத்திலேயே UB புகழ் அண்ணன் விஜய் மால்யா - கிங் ஃபிஷரைத் துவக்குவதாக அதிரடியாக அறிவித்தார். shaw wallace டீல் ஆகட்டும் கிங் ஃபிஷர் ஆகட்டும் - விஜய் மால்யாவின் வழி தனி வழி தான். Economy class, executive class என்று தொன்று தொட்டு இருந்த வழக்கத்தை தூக்கிப் போட்டு கிங்பிஷர் கிளாஸ் என்று ஒரு தனி கிளாஸை உருவாக்கி விட்டார் - அதாகப்பட்டது - எல்லா பயணிகளுக்கும் ஒரே மாதிரியான சேவை கிடைக்கும். அது மட்டுமில்லாமல் கிங்ஃபிஷரை மக்களுக்கு விற்பதற்காக (மார்க்கெட் செய்வதற்காக) ஏறக்குறைய 40 கோடி செலவு செய்துள்ளார்
  • கோவா டூரிஸத்துடன் டை அப்
  • கிங் கிளப் போன்று loyalty programme என பல முனை தாக்குதல் நடத்தி வந்தார்
  • அதோடு மட்டுமில்லாமல் 2012க்குள் 4.5 பில்லியன் யூ ஸ் டாலர்களை முதலீடு செய்து
   தற்போதைய மார்க்கெட்டை முற்றிலுமாக ஆக்கிரமிக்க திட்டங்கள் வைத்துள்ளார்
  • அந்த கேலண்டர் மேட்டரை நான் தனியாக சொல்ல வேண்டியதில்லை

இப்போது தான் ஆட்டமே ஆரம்பித்திருக்கிறது. இப்பொதைய நிலவரப்படியான மார்கெட் ஷேர்

ஏர் டெக்கான் - 21. 2 % ஸ்பைஸ் ஜெட் - 6 % கிங் ஃபிஷர் - 8 % ஏர் சஹாரா - 8 % கோ ஏர் - 2 % ஜெட் - 24 % இந்தியன் - 22 %


இதில் லேசாக ஆட்டம் கண்டிருப்பது ஜெட் ஏர்வேஸ் தான். ஏனென்றால், மார்க்கெட்டில் தன்னுடைய நிலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய பிரஷரை இரண்டு பக்கத்திலிருந்து சந்திக்கின்றது. முதலாவது ஏர் டெக்கான், ஸ்பைஸ் ஜெட் போன்ற குறைந்த கட்டண சேவை அளிக்கும் நிறுவனங்கள் அளிக்கும் பிரஷர். இனிமேல் அதிக விலை கேட்பது என்பது இந்திய மார்க்கெட்டில் நடக்காது. இந்தியா போன்ற நாடுகளில் வளர்ந்து வரும் நடுத்தர வர்கத்தின் வாங்கும் சக்தி அதிகரித்துக் கொண்டே இருப்பது முக்கிய காரணம். இந்தியாவில் தான் அதிகமான மக்கள் 20 – 25 வயது வரம்பில் இருக்கின்றனர். “Buying patterns” -ஐ மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
இரண்டாவது மற்றும் மிக முக்கியமான் பிரஷர் கிங் ஃபிஷர் அளிப்பது - ஏனென்றால் - ஏறக்குறைய ஜெட்டில் கிடைக்கும் வசதி அதை விட சற்றே குறைந்த கட்டணம் என்பது மிகவும் வெற்றிகரமான value proposition. அதை விட முக்கியம் கிங் ஃபிஷரின் அதிக முதலீடு செய்யக் கூடிய சக்தி. இந்த நிலையில் தான் ஜெட் ஏர்வேஸ் ஏர் சஹாராவை வாங்கி அதை ஜெட் லைட் என்று குறைந்த கட்டண சேவைக்கான செக்மெண்டில் களம் இறக்கி விட்டிருக்கிறது. அத்தோடு இல்லாமல், ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஜெட்டை இன்னும் விஸ்தரித்து ப்ரிமியம் செக்மெண்டில் தன்னை ஆழமாக நிலை நிறுத்திக் கொள்வது தான் திட்டம். இதன் மூலம் இந்த இரண்டு செக்மெண்ட்டையும் சேர்த்து ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு மார்க்கெட்டை கைப்பற்றிவிடும் ஜெட். நல்ல திட்டம் !
ஆனால் இது கிங் பிஷரும் டெக்கானும் இணைவதற்கான நல்ல சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ஆனால் இவர்கள் இணைவார்க்ளா என்று நிச்சயமாக தெரியவில்லை. இணைந்தால் இந்த சூழ்நிலை சற்றே மிதப்படும். மார்க்கெட்டும் ஸ்டெபிலைஸ் ஆகும். இதெல்லாம் நடக்கும் போது நடக்கட்டும் இந்த படத்தைப் பாருங்கள்.
Photo Sharing and Video Hosting at Photobucket

பி கு: இந்த பதிவில் இருக்கும் தகவல்கள் பல்வேறு தளங்களிலிருந்து சேர்க்கப்பட்டவை. நான் சொந்தமாக ஆராய்ச்சி நடத்தி தயாரித்தவை அல்ல.

http://www.moneycontrol.com/india/news/business/jetjetlite/istheresomethin/market/stocks/article/277407

http://www.thehindubusinessline.com/2007/04/25/stories/2007042504711000.htm

No response to “ஆரம்பிச்சுட்டாங்கய்யா... ஆரம்பிச்சுட்டாங்க !”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman