Adsense

Road Signs


நேற்று மாலை நான் அலுவலக கேண்டீனில் சூடாக சமோசா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, என் நண்பர் ஜோதிட திலகம் ஜோதிகாதாசன் வந்தார். அவர் மீது எனக்கு எப்போதுமே ஒரு விதமான ஈர்ப்பு உண்டு. பின்னே கண்ணால் பார்க்காததையும், காதால் கேட்காததையும் தனது ஜோதிட அறிவால் புட்டு புட்டு வைப்பவரைப் பார்த்து எப்படி ஈர்க்கப்படாமல் இருப்பது ? சகுனம் சொல்வது, பட்சி சாஸ்திரம் பார்த்து குறி சொல்வது என தலைவர் போட்டுத் தாக்காத துறைகளே இல்லை எனலாம். அலுவலகத்தில் யாருக்கும் யாருக்கும் லவ்ஸ் என்பது தொடங்கி, இந்த முறை யாருக்கு ப்ரமோஷன் என்பது வரை மனிதர் சொல்லி விடுவார், அவை நடக்கும் முன்பே. அந்த அளவிற்கு ஒரு பாண்டித்யம், வாக்கு வல்லமை.
நேற்று மனிதர் சொன்னது Road Signs. அதாவது Sun signs, Moon signs மாதிரி தலைவர் சொன்னது ரோட் சைன்ஸ். உங்கள் பால் (ஆணா, பெண்ணா), உங்களுடைய வயது மற்றும் நீங்கள் ஓட்டும் வண்டி பற்றிய தகவல்கள் இருந்தால் போதும் உங்களால் எப்படி மட்டுமே சென்னையில் வாகனம் ஓட்ட முடியும் என்பதை அக்குவேறு ஆணிவேறாக புட்டு வைத்து விடுவார். அவரிடம் அப்படியே அப்யாஸம் எடுத்துக் கொண்டு உங்களுக்காக கொண்டு வந்திருக்கிறேன் பாருங்கள்.

நீங்கள் சென்னையில் வாகனம் ஓட்டுகிறீர்கள் என்றாலே சில பொது பலன்கள் உண்டு. இது சகல வாகன ஓட்டிகளுக்கும் பொருந்தும்.

1) சாலையின் இடப்புறம் மட்டுமே ஓட்ட வேண்டும் என்ற பொது விதி உங்களுக்குப் பொருந்தாது. புகுவதற்கு கொஞ்சம் இடைவெளி போதும் அது சாலையின் வலப்புறமே ஆனாலும் உங்களுக்கு கவலையில்லை.
2) உங்களால் சாலையின் எந்த கோடியிலிருந்தும் எந்த கோடிக்கும் திரும்ப முடியும், இண்டிக்கேடர் போடாமலே.

இனி specific-ஆன பலன்கள்

நீங்கள் 30-வயத்திற்கு உட்பட்ட ஆண்/ பெண், இரு சக்கர வாகன ஓட்டி

உங்கள் வாகனம் எப்போதுமே அடுத்த வாகனத்தை முந்த வேண்டும் என்ற இலக்கில் தெளிவாக இருப்பீர்கள். சாலையில் இருக்கும் ஸ்பீடு பிரேக்கர்கள் பற்றிய கவலைகள் உங்களிடம் கிடையாது. ட்ராபிக்கில் பின்னால் இருக்கும் போது சிவப்பு சிக்னல் பச்சைக்கு மாறிய முதல் வினாடியிலிருந்தே ஹாரன் அடிக்கத் துவங்கிவிடுவீர்கள். ஹேண்ட்ஸ் ஃபிரி கிட் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வாகனம் ஒட்டும் போது வரும் கால்களை அட்டெண்ட் செய்வீர்கள். போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலைகளில் நண்பர்களாக செல்லும் போது ட்ரிபில்ஸ் செல்லுதல், மற்ற நண்பர்களின் வாகனத்தின் பக்க வாட்டில் ஒரே வேகத்தில் அரட்டையடித்துக் கொண்டே செல்லுதல் போன்ற உங்கள் பிறப்புரிமையை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டிர்கள். சில கிழம் கட்டைகளால், திட்டுக்கும், அறிவுரைக்கும் ஆளானாலும் அவற்றையெல்லாம் தூர எறிந்து விட்டு மறுநொடியே உங்கள் கடமையாற்ற தயாராகி விடுவீர்கள்.

நீங்கள் 30-வயத்திற்கு உட்பட்ட ஆண்/ பெண், நான்கு சக்கர வாகன ஓட்டி

உங்கள் வாகனம் எந்த வாகனித்தின் மீதும் மோதிவிடக்கூடாது என்ற கவனம் இருந்தாலும், சாலையில் அத்தனை சந்திலும் புகுந்து விடும் வேகம் உள்ளவர்கள் நீங்கள். காரை இரு சக்கர வாகனம் போல போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளில் ஓட்ட முடியும் என்று நிருபிக்கும் திறமை உங்களிடம் உண்டு. உங்கள் வாகனத்தில் எப்போதும் ஏதேனும் ஒரு இசை கசிந்து கொண்டே தான் இருக்கும். அதிரடி இசையின் போது மட்டும், முழு வால்யூமில் கண்ணாடி கதவுகளை இறக்கி விட்டு விட்டு பயணம் செய்யும் கொள்கை வீரர்கள் நீங்கள். உங்கள் வாகனத்தில் யாரேனும் மோதிவிட்டால், காரை நிறுத்தி நீங்கள் பேசும் முதல் வாக்கியத்தில் fcuk, siht, hell ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது எல்லாமுமோ இல்லாமல் பேசுவதில்லை என்ற கொள்கை கொண்டவர்கள் நீங்கள். இரவு நேரத்தில் வாகனம் ஓட்டும் போது High beam மட்டுமே உபயோகித்து சாலைகளில் ஒளியேற்றுவீர்கள்.

நீங்கள் மஞ்சள் நிற நம்பர் போர்ட் போட்ட நான்கு சக்கர வாகன ஓட்டி

"உலகம் பிறந்தது எனக்காக, போட்ட சாலைகளும் எனக்காக" என்ற முழக்கம் கொண்டவர்கள் நீங்கள். நீங்கள் ஓட்டும் சாலைகள் F1 ரேஸிங் சாலைகளாக இல்லாதிருத்தலும் சாலைகளின் குறுக்கே அற்ப ஜந்துக்கள் வலையவருதலும் உங்கள் துரதிருஷ்டம். சாலையின் குறுக்கே உங்கள் அனுமதியின்றி மஞ்சள் நிறத்தில் டிவைடர் கோடு போட்ட அரசு அலுவலர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் வகையில் அந்த கோட்டைத்தாண்டியே வண்டியை நிறுத்துவீர்கள். நீங்கள் சாலையைக் கடக்க சிக்னல் தேவையில்லை. சிகப்பு சிக்னலேயானினும் ஒரு சிறிய இடைவெளியில் வண்டியை நுழைத்து சென்று கொண்டே இருக்கும் சாகஸக்காரர்கள் நீங்கள். சிக்னலுக்கு நிற்பவன் வாகனம் ஓட்டத் தெரியாதவன் என்ற சித்தாந்ததில் உறுதியாக இருப்பீர்கள். வாகனம் ஓட்டும் போது ஆக்ஸிலேட்டரில் கால் இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு முக்கியம் ஹாரனில் கை இருப்பது என்று தெளிந்த அறிவாளி நீங்கள். ஒரு வழிப்பாதை மேம்பாலத்தில் நீங்கள் எவ்வளவு முறை ஹாரன் அடித்தும் உங்களும் வழி விடாமல் செல்லும் அற்ப வாகன ஓட்டியின் அராஜகத்தை எதிர்க்கும் வகையில் "தேவடியா மவனே, ஓத்தா டேய், பாடு, ஆளா நீ" போன்ற வீர முழக்கங்களை சரித்திரத்தில் பதிவு செய்வீர்கள்.

நீங்கள் ஒரு ஆட்டோ ஓட்டுனர்

உங்கள் திறமை உங்களுக்கே தெரியாது. நீங்கள் ஒரு அற்புதமான மாயாஜாலங்கள் நிகழ்த்துபவர். பள்ளங்களுக்கு நடுவே இருக்கும் சாலையில் மட்டுமே வண்டி செல்ல வேண்டும் என்ற தேவைக்காக வண்டியை வளைத்து வளைத்துச் செல்லும் அழகில் போக்குவரத்தே ஸ்தம்பித்து விடும். தமிழர்களின் நிறம் கருமை என்பதால் உங்கள் வாகனத்தை பின் தொடரும் எல்லோருக்கும் கரிய மேக்கப் பூசி விடுவீர்கள், இலவசமாக. சாலையின் ஓரத்தில் யார் இருந்தாலும் அவர் பக்கம் சடாரென திரும்பக்கூடிய அல்லது சடன் பிரேக் போடக்கூடிய வல்லமை பெற்றவர்கள் நீங்கள். வாகனத்தின் மீது யாரேனும் மோதினாலோ யாரேனும் ரோட்டில் விழுந்தாலோ "அதான் கை போட்டோம்ல" என உங்கள் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்லத் தயங்காத சத்தியவான்கள். வாடிக்கையாளரை நேரத்தில் இடத்தில் சேர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்திலும், யாரும் அதிகம் பயன்படுத்ததாலுமே நீங்கள் சாலையோர பிளாட்பாரங்கள் மீது ஆட்டோ ஓட்டுவீர்கள்.


பல்லவன் பஸ் ஓட்டுனர்

"நீங்கள் எப்போது நிற்பீர்கள், எப்படி நிற்பீர்கள்" என்று யாருக்கும் தெரியாது ஆனா நிற்கக் கூடாத இடத்தில் கரெக்டாக நிற்பீற்கள். சாலையைப் பொருத்தவரை அண்ணாச்சி, நீங்க தான் எஜமான். நீங்க நினைச்சா எவ்வளவு பெரிய வண்டியையும் அழகாக ஓரம் கட்டி விடுவீர்கள். நீங்கள் ஓட்டும் வண்டி பிரேக் டவுன் ஆகாதது போக மீதமிருக்கும் சாலைகளில் மட்டும் தான் போக்குவரத்து சகஜமாக இருக்க முடியும். ஒன்றன் பின்றாக போக வேண்டிய கட்டாயம் இரு பேருந்திற்கு இருந்தாலும் நெரிசல் மிக்க சாலையில், நீங்கள் இன்னோரு பேருந்தை முந்துவீர்கள். அதனால் ஏற்படும் குழப்பத்துக்கு அஞ்சியே மாநகரமே உங்களை "சாலையின் தாதா" வாக ஏற்றுக் கொள்ளும்.

ஏனையோர் (30 வயதுக்கு மேற்பட்ட ஆண்/ பெண் - இரு/ நான்கு சக்கர வாகன ஓட்டி)

மெற்பட்ட பட்டியலில் சொன்னவர்கள் செல்வது போக மீதி இருக்கும் இடத்தில் மேற்படி பட்டியலில் சொன்னவரகளை மனதிற்குள்ளோ வாயாலோ திட்டிக் கொண்டே உயிருக்கும் உடமைக்கும் சேதம் குறைவான சேதத்துடன் வண்டி ஓட்டும் அற்ப ஜந்துக்கள்.


பி கு: பிளாக் போஸ்ட்டுக்கெல்லாம் தமிழ்ல தலைப்பு வைச்சா யாராவது எதாவது வரி சலுகை கொடுப்பாங்களா ?

No response to “Road Signs”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman