Adsense

மதுமிதாவின் கவனத்திற்கு


உங்கள் பதிவில் நீங்கள் செய்வது எவ்வகையிலான ஆய்வு, அதன் நோக்கம்/ பயன்பாடு என்ன என்பது குறித்து மேலதிக விவரங்கள் எழுதுவீர்களேயானால் நன்றாக இருக்கும். இந்த தகவல்களை நீங்கள் உங்கள் ஆய்வுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இனி உங்களுக்குத் தேவையான தகவல்கள்
வலைப்பதிவர் பெயர்: சந்திரசேகரன் கிருஷ்ணன்

வலைப்பூ பெயர் : அஞ்சறைப் பெட்டி

சுட்டி(url) : http://krishchandru.blogspot.com/

ஊர்: சென்னை

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நினைவில்லை. எங்காவது படித்திருப்பேன்.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 2004 ஜூன்.

இது எத்தனையாவது பதிவு: 27

இப்பதிவின் சுட்டி(url): http://krishchandru.blogspot.com/2006/06/blog-post.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: எழுதுவது பிடிக்கும். என் எழுத்துகள் நான் முகம் பார்க்கும் கண்ணாடி. நான் எழுதுவது ஹார்ட்-ட்ரைவ் கிராஷ் ஆவதால் காணாமல் போகாமல் இருக்க வேண்டும் என்றும், இணையத்தில் சில குழுக்கள் சிதறி கிடக்கும் என் படைப்புகளை சேமிக்க வேண்டும் என்றும் நினைத்தேன். அதையே ஒரு தளமாக அமைத்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என்று வலைப்பூ தொடங்கினேன். மற்றபடி வேறு எந்த காரணமும் கிடையாது.
( உண்மையைச் சொன்னால் வலைப்பூவை நான் ஒரு சேமிப்பு கிடங்கு என்ற கோணத்தைத் தவிர வேறு கோணத்தில் பார்க்கவில்லை. இதில் இருக்கும் Archival facility, மற்றும் dynamic searching capability மட்டுமே வலைப்பூக்கள் வாயிலாக நான் பெற நினைத்த primary benefits. வலைப்பூவில் எனக்கு கிடைத்த மற்றதெல்லாம் போனஸ் என்று நினைக்கிறேன். )
(பின் வரும் கேள்விகளில் எல்லாம் "வலைப்பூக்கள் வாயிலாக" என்பதை prefix செய்து கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்)
சந்தித்த அனுபவங்கள்: இணையத்தில் இருக்கும் சுதந்திரம் வேறு எங்கும் கிடைக்காது. சுதந்திரம் என்பது அதிகப்படியான பொறுப்பு என்பதை பலர் மறந்து விடுகின்றனர் என்பது இணைய அனுபவத்தில் உணர்ந்த கசப்பான உண்மை.
பெற்ற நண்பர்கள்: நண்பர்கள் என்று அவர்களை சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால் எழுத்து குறித்த பின்னூட்டத்தை பகிர்ந்தது தவிர யாருடனும் அதிகம் அளவளாவியது கிடையாது. நல்ல அறிமுகங்கள் என்று பலரைச் சொல்லமுடியுமென்று நினைக்கிறேன். குறிப்பாக ஜெயந்தி சங்கர். என்னுடைய ஒரு கவிதையை அவராகவே மனுஷ்யபுத்திரனிடம் எடுத்துச் சென்று கருத்தைப் பெற்று அதை அவரே எனக்கு forward செய்தது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. Thanks for that camaraderie.
கற்றவை: நிறைய. பல துறைகளைப் பற்றிய அறிமுகம் முதல் ஆழமான விளக்கங்கள் வரை வலைப்பூக்களில் கிடைத்ததன.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: யாருக்கும் பிடித்தமாதிரியும் எழுத வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. எழுதி முடிக்க வேண்டிய deadlines கிடையாது. மனதிற்கு பிடித்ததை மட்டும் - பிடித்த நேரத்தில் எழுதலாம். ஒரு வனாந்திரத்தில் திரிவது போன்ற கட்டுகளற்ற சுதந்திரம். இணையத்தில் கிடைக்கும் இந்த சுதந்திரம் அரிதானது.

இனி செய்ய நினைப்பவை: தொடர்ந்து தரமான படைப்புகளை மட்டும் எழுத வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: படித்தது கணினி பொறியியல். தற்போது ஒரு மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில், ப்ராஜெக்ட் மானேஜராக பணி புரிகிறேன். வசிப்பது சென்னை பெசண்ட் நகர். அலுவலகத்தில் கழித்தது போக மீதமிருக்கும் நேரத்தைக் கொல்ல உதவுவன - புத்தகங்கள், உலக திரைப்படங்கள், கடற்கரை மற்றும் கனவுகள் (அதாவது தூக்கம்).

No response to “மதுமிதாவின் கவனத்திற்கு”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman