Adsense

பரிணாம வளர்ச்சி


என் மூளையில்
ஒரே ஒரு நியூரான் மட்டுமே
எஞ்சி இருந்தது.
என் கை விரல்களுக்கிடையில்
சில புத்தகங்களின் சாம்பலையும்
சில முலைகளையும்
ஒரு தத்துவத்தையும்
முப்பதிரண்டு இலக்க பைனரி எண்ணையும்
நெடு நாட்களாக பூக்காத
செம்பருத்திச் செடியையும்
அழுத்திப் பிடித்திருந்தேன்.
தூரத்திலிருந்து ஒளிவட்டம்
கொண்ட சிறுமியொருத்தி
என்னைப் பார்த்து புண்ணகைத்தாள்.
அந்தப் பேரமைதியில் என்
பிடியைத் தளர்த்தி
ஒற்றை நியூரானையும் பிடுங்கி எறிந்தேன்
என் கால்களுக்கடியில்
சிதறிக்கிடந்த ஒரு கவிதையை
எடுத்து என் கையில் தந்துவிட்டு
வேறேதும் சொல்லாமல் சென்று விட்டாள் அச்சிறுமி.
செம்பருத்தி நீல நிறத்தில் பூத்திருக்கிறது.

One response to “பரிணாம வளர்ச்சி”

மிழ் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைய பிளாக்கர் மூலமாக பல அரிய கருத்துக்களை தந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் கருத்துக்கள் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது.

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman