Adsense

வெண்மை


வெண்மை
-------
மெல்லிய காம்பைப் பிடித்திருக்கும்
விரல் மேல் மெல்ல ஊர்ந்து
கைகள் வழியே
மேலெழும்பி
என் கழுத்தையும் தலையையும்
நிறைத்த பிறகு
மெதுவாக கீழிறங்கி
என் உடல் முழுதும் பரவியபின்
என்னைச் சுற்றிலும்
இப்போது சிதறிக் கொண்டிருக்கிறது
நான் ரசித்துக் கொண்டிருக்கும்
காண்பதற்கு அரிதாகிவிட்ட
தும்பைப் பூவின் வெண்மை.
ஐராவதங்களின் உலகில் நான்
பயணப்படத் துவங்கியிருந்த
இச்சமயத்தில் தான் நீ என்னிடம்
கையிலிருந்த சில்லரைகள் இருக்கும்
பாத்திரத்தைக் குலுக்கி
அதட்டும் தொணியில்
பிச்சை கேட்கிறாய்
அழுக்கான தேகத்துடனும்
வெள்ளைப் படிந்த கீழுதட்டுடனும்.

No response to “வெண்மை”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman