Adsense

ஒரு குழந்தையின் நினைவு


இந்த கூடத்தில் நேற்று ஒரு
குழந்தை இருந்தது
மண் குதிரையின் காதுகளைப் பற்றி ஆட்டிக் கொண்டும்
லஜ்ஜையின்றி அடுத்தவர் தட்டிலிருந்து சாப்பிட்டுக் கொண்டும்
சிறு வண்டுகளை துரத்திக் கொண்டும்
ஜன்னல் வழியே தெரிவோருக்கு டாடா காட்டிக் கொண்டும்
நடுக் கூடத்தில கீழாடையிலேயே் மலஜலம்் கழித்துக் கொண்டும்
புரியாத மொழியில் ஏதோ பேசிக்கொண்டும்
கண்ணாடி பிம்பத்தோடு நட்பு பாராட்டிக் கொண்டும்
சிறிய கைகளால் எதிர்பாராத சமயத்தில் முகத்தில் அறைந்து கொண்டும்
பெரியவர்களின் செய்கைகளை திரும்ப செய்து கொண்டும்.
கடக்க இயலா பெருவெளியாய்உருமாறிவிட்ட
இந்த கூடத்தில் நேற்று ஒரு
குழந்தை இருந்தது

No response to “ஒரு குழந்தையின் நினைவு”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman