Adsense

நான் கொஞ்சூண்டு புத்திசாலி ?


இந்த வார ஆனத்த விகடன் படித்தேன். சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பகுதியில் அவர் தந்திருந்த “விநோத வாக்கியங்கள்” புதிர் சுவரசியமாக இருந்ததால் விடை கண்டு பிடிக்க முன்றேன். எனக்கு அவ்வளவு சுலபமாக இல்லை. கொஞ்ச நேரம் மண்டையை உடைத்த பின் ஏதோ சில தேறின.
விடைகள்
1) அக்னி நட்சத்திரம்
2) ஏழையின் சிரிப்பு
3) வளரும் சமுதாயம்
4) ஜூனியர் விகடன்
5) சந்திக் குறுக்கம் ( நிச்சயமாக தெரியவில்லை)
6) தலை கீழாக ஏற்றப்பட்ட கொடி
7) தனி நாடு ( நிச்சயமாக தெரியவில்லை)
8) ஊர் சுற்றி ( வேறு கோணம் இருக்கலாம் )
9)
10)
11) திரும்பிப் பார்
12) ஆயிரத்தில் ஒன்று

இதே போல ஒரு “புதிர் வாக்கிய செட்”-ஐ தேசிகன் வலைப்பதிவில் பார்க்க நேர்ந்தது. அதே போல தமிழில் முயற்சி செய்திருந்தார் கவிதா (புதிருக்கான தேசிகனின்் வலைப்பதிவில் பின்னூட்டத்தில் பார்க்கவும்)


சரி என் அப்பவுக்காக நான் தயாரித்த குறுக்கெழுத்துப் போட்டி.

Image hosted by Photobucket.com

இடமிருந்து வலம்
1) லசாப்சோ போல இது ஒரு ஜாதி
2) லாக்கப்பிலிருந்து வெளியே வர உதவுவது
6)். உடல் நலத்திற்காக மேற்கொள்ளப்படும் எளிய உடற்பயிற்சி - ஆங்கில சோல்
7) யாதும் ஊரே, ___________ர்
12) ஒரு வகை மது பானம்
18) சமிபத்தில் மறுமணம் புரிந்த இங்கிலாந்து இளவரசன்
19) கூடுதல்
21) இந்தியாவின் கொண்டையிலிருக்கும் மாநிலம்
23) இனிப்புக்காக சேர்க்கப்படும் பதார்த்தம்

மேலிருந்து கீழ்
1) ஆறுகளே இல்லாத கண்டம்
2) குதிரைகளை பந்தயங்களில் ஓட்டுபவர்
3) சுப காலை - சமஸ்கிருத சொல்
5) நிலவில் கால் வைத்த முதல் மனிதர்
6) தண்ணீர் அள்ள பயன்படுவது
8) கிணறுக்கு இன்னொரு பெயர்
11) செவன் இயர் இட்ச்சில் பாவாடையை பறக்க விட்டவர்.
13) _____ த்திற்கு நான்கு பக்கங்களும் சமம்.
15) தாத்தா, அப்பா, மகன், பேரன்

வலமிருந்து இடம்
5) தொடங்கு
9) பல ஆயிரக்கணக்கான வருடங்களாக இமயமலையில் ஜோதிவடிவமாக வாழ்வதாக சொல்லப்படுபவர்
13) இங்கிலாந்தால் வழங்கப்படும் உயரிய பட்டம்
14) ஒரு வகை வாகனம்
15) கூட்டத்தில் பாம்பைக் கண்டவுடன் கூட்டத்தினர் ____ பதைத்தனர்.
16) கோட்டை
17) சிதார் இசை மேதை


கீழிருந்து மேல்
4) அறுநூரு தலை வாங்கிய அபூர்வ சிகாமணியின் முதல் பெயர்
10) ரிஷிகள் காட்டில் செய்வது
12) இந்திரனின் அரசவை நடன மங்கை
19) செவ்வாய்க்கு இன்னொரு பெயர்
20) கவிஞனின் படைப்பு
22) அறுபத்து ________
23) __ லீலாவதி

2 Responses to “நான் கொஞ்சூண்டு புத்திசாலி ?”

PusVanam said...

I guess some of the clues are messed up..

for eg
15) _____ த்திற்கு நான்கு பக்கங்களும் சமம்

Is this 13 down ?

17) தாத்தா, அப்பா, மகன், பேரன்

Is this 15 down ?

19) சிதார் இசை மேதை
Is this 19 down to up ?

இப்போது சரி செய்து விட்டேன். நன்றி நிஷா.

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman