Adsense

The Wrongside


அமெரிக்காவில் முதல் வாரம். அலுவலகம் விட்டால் ஹோட்டலறை, ஹோட்டலறை விட்டால் அலுவலகம் என இந்த ஒரு வாரம் ஓடி விட்டது. கேரியின (ஹோட்டலின் ஷோபர்)் புண்ணியத்தில் அலுவலகத்துக்கும் ஹோட்டலுக்கும் சிரமமின்றி பயணப்படுகின்றேன். சென்னையின் வேளை பளு இங்கும் தொடர்வதால் பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. ஆனால் இவர்களின் வாகனமோட்டும் விதம் தான் என்னை கொஞ்சம் குழப்பிவிட்டது. முதல் இரண்டு நாட்கள் சற்று குழம்பியபின் இப்போது தெளிந்து விட்டேன் :o).
ஒவ்வொரு நாளும் பயணத்தின் போது நானும் கேரியும் ஏதாவது பேசிக்கொண்டே செல்வோம். பெரும்பாலும் அவன் பேசுவான், நான் கேட்பேன். (எனக்கு புதியவர்கள் பேசுவதை கேட்க எப்போதும் பிடிக்கும்). பெரும் பாலும் நகரின் பெருமையையும் ஹோட்டலின் பெருமையயும் சொல்லிக்கொண்டு வருவான்.
ஒரு நாள் எங்கள் சம்பாஷனை இப்படி இருந்தது.
“Had you been to any other country other than United States Sir.”
“Yeah, I had been to. How about you?”
“No, I have never in my life traveled out site US”.
“Ok...”
“How do you find United States Sir, when compared to other countries”
“I have not traveled much with in US, So I can tell you only about this city. This is as cool as any other city I have visited. I like this place”
“You bet, this is a real good place”
“The difference is, never in other countries, I found people driving on right hand side of the road.”
“Yeah, they are doing it the wrong way”
“Would you prefer to say the other way”
“No sir, It is the wrong way”
“Why do you say so?”
“You have to drive on the right hand side, don ya? Driving left will confuse people”
“...”
“That is one reason I would not prefer to visit them”

அதற்கு மேல் அது குறித்து பேசாமல் வேறு விஷயம் பேச ஆரம்பித்து விட்டோம். கேரி ஒரு அமெரிக்கன். வார நாட்களில் காலையில் காரோட்டிவிட்டு மாலையில் அருகில் இருக்கும் கல்லூரியில் பியானோ வகுப்பெடுக்கிறான். வார இறுதியில் ஜாஸ் இசைகுழு நடத்துகிறான்.

One response to “The Wrongside”

வாசன் said...

அமேரிக்காவிற்கு வருக!வருக!.

உலகின் முக்கால்வாசி நாடுகளில் சாலையின் வலது பக்கம்தான் காரோட்டுகிறார்கள்.

உங்களுடைய உரையாடலில் வரும் Sir என்பது ஆச்சரியத்தைத் தருகிறது.
அவ்வளவாக யாரும் பயன்படுத்துவதில்லை.

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman