Adsense

The wrongside - Part II


வலது கைப் பக்கம் வாகனம் ஓட்டுதல் பற்றி நான் எழுதிய பதிவின் தொடர்ச்சி இது. வலது கை பக்கம் வாகனம் ஓட்டுதலுக்கு அறிவியல் காரணத்தைக் காட்டிலும், வரலாற்று காரணம் தான் பிரதாணமாகப் படுகிறது.

முதலில் எல்லோரும் இடது கைப்பக்கம் தான் வாகனம் ஓட்டி இருந்திருக்கிறார்கள். முதலில் என்றால் மனிதன் கால் நடைகளை போக்குவரத்துக்கு பிரதாணமாக பயன்படுத்திய காலத்தில். வாகனம் என்றால் விலங்கு தான். அப்போது மனிதர்கள் வாள் கோடாரி போன்ற ஆய்தங்களையே போருக்கு பயன்படுத்தி வந்திருக்கின்றனர். பெரும்பாலும் வலது கைப் பழக்கமுள்ளவர்கள் கத்தி போன்ற ஆயுதங்களின் உறைகளை உடலின் இடது பக்கம் அணிந்து வந்திருக்கின்றனர். அவ்வுறைகளும் ஆயுதங்களும் எதிரே வருபவருடன் மோதாமல் இருக்கவும், எதிராளியின் ஆயுதத்திலிருந்து தம்மை விலக்கிக் கொள்ளவும் சாலையின் இடது பக்கத்தில் பயணம் செய்து இருக்கின்றனர். மேலும் இடது பக்கம் அணிந்த ஆய்தங்களுடன் குதிரையின் இடது பக்கம் ஏறுவதே சௌகரியம். அப்படியே இடது பக்கம் இறங்குதலும். மனிதன் சாலையின் இடது பக்கத்தில் பயணித்தால் தான் எதிரே வருபவருக்கு தொந்தரவின்றி சாலையின் ஓரத்திலிருந்து குதிரையில் ஏறவோ இறங்கவோ முடியும். இக்காரணங்களாலேயே மனிதன் இடது பக்கம் பயணம் செய்து வந்திருக்கிறான்.

பின்னர் விலங்குகள் பூட்டிய சக்கரங்களுடைய வாகனத்தில் பயணம் செய்ய ஆரம்பித்த பின், மேலை நாடுகளில் வலது கை பழக்கமுடைய மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட விலங்குகள் பூட்டிய வாகனத்தை இயக்க, பின் வரிசையில் இடது பக்கம் இருக்கும் விலங்கில் அமர்ந்து பயணப்பட்டான். (அந்த காலத்தில் ஓட்டுனர் இருக்கை இருக்கவில்லை). வாகனத்தின் இடது ஓரத்தில் இருந்ததால் வாகனத்தின் வலது கை பக்கத்திலிருந்து அவனை கடப்பவரை அவனால் பார்க்க முடியவில்லை. ஆதலால் அவன் சாலையின் வலது பக்கம் பயணம் செய்ய ஆரம்பித்தான். இப்போது அவனால் அவனை கடப்பவரை எளிதாக காண முடிந்தது. மேலும், வலது கை பக்கம் வாகனமோட்டும் பழக்கம் ஐரோப்பவில் பெருமளவிற்கு பரவ காரணம் ப்ரென்ச் புரட்சியின் முக்கிய நிகழ்வான சிறை ஆக்கிரமிப்பு. அதுவரையில் பிரான்ஸில் ஆட்சியாளர்கள் இடது கை பக்கமும், குடியாணவர்கள் இடது கை பக்கமும் பயணம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின் ஆட்சியாளர்களும் பாதுகாப்பு கருதி சாலையின் வலது பக்கம் பயணம் செய்ய துவங்கினர். அதன் பின் அது சட்டமாகவே ஆக்கப்பட்டது. நெப்போலியனால் இந்த வலது கை வாகனமோட்டும் பழக்கம், அவன் கைப்பற்றிய எல்லா நாடுகளிலும் பரவியது. நெப்போலியனை எதிர்த்த தேசங்கள் இடது கை பக்க பழக்கத்திலேயே இருந்தது, குறிப்பாக பிரிட்டன். (முடிவின்றி ஜெயித்துக் கொண்டிருந்த நெப்போலியன் வாட்டர்லூ போரில் தோற்றான் என்பது வரலாறு. )
பிரிட்டனின் காலனிகளாக இருந்த தேசங்களில் இடது கை பழக்கமே இருந்தது, இருக்கிறது (இந்தியா, ஆஸ்திரேலியா, கிழக்கு ஆப்ரிக்கா...)
பிரிட்டனின் காலனியாக இருந்த காலத்தில் வட அமெரிக்காவிலும், இடது கை பக்கம் வாகனமோட்டும் பழக்கமிருந்திருக்கிறது ! சுதந்திரமடைந்த பின் பழைய பழக்கங்கள் அனைத்தையும் அறுக்கும் வகையிலும், பிரட்டனின் சாயைகளிலிருந்து தப்பிக்கும் வகையிலும் வட அமெரிக்கா மெல்ல வலது கை பக்கம் வாகனமோட்ட துவங்கியது. இதை முதலில் சட்டமாக அமல் படுத்தியது பெனிஸில்வேனியா தான் (1792). அதன் பின் மொத்த அமெரிக்காவும்.
அமெரிக்காவில் இப்படி என்றால், இரண்டாம் உலகப் போர் வரை கண்டாவில் ப்ரென்ச் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மாகாணங்கள் வலது கை பக்கமும், பிரிட்டனின் ஆதிக்கத்துக்குட்பட்ட மாகாணங்கள் இடது கை பக்கமும் வாகனமோட்டி வந்தன. பின்னர் இடது கை பக்கம் வாகனமோட்டும் மாகாணங்களும் அமெரிக்காவுடனும், கனடாவின் மற்ற பகுதிகளுடனும் ஒத்து போகும் வகையில் வலது கை பக்கம் மாறி விட்டன.
இதில் இன்னுமொறு வேடிக்கை, ஏனைய மேற்கத்திய நாடுகளுடன் ஒத்துப் போகும் வகையில் பிரிட்டனும் வலது கை பக்கம் மாற 1960 களில் சபலப்பட்டிருக்கிறது. பின்னர் கண்சர்வேடிவ்களின் பிடிவாதத்தாலும் கணக்கிடப்பட்ட பொருசெலவாலும் இந்த திட்டம் கை விட பட்டிருக்கிறது. ஜெர்மனி ஆக்கிரமித்தபின் ஆஸ்ட்ரியாவும், செக்கோஸ்லொவாக்கியாவும் மற்றும் ஹங்கேரியும் வலது கை பக்கம் மாறி இருக்கிறன. இதில் ஹிட்லரும் தன் பங்குக்கு கூத்தடித்திருக்கிறார். ஆக்கிரமித்த பின் இரவோடிரவாக ஆஸ்ட்ரியாவை வலது கை பக்கம் மாற கட்டளையிட்டிருக்கிறார். மெல்ல மெல்ல உலகின் பிற நாடுகளும் வலது கை பக்கம் மாறியிருக்கிறது. மிக சமிபத்தில் மாறிய நாடு ஸ்வீடன் (1967).

No response to “The wrongside - Part II”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman