Adsense

Kavithai


வானத்தை நோக்கிக் கைகளேந்திய
ஆளுயர கருட வாகனமும்,
புறாக்களும் வவ்வால்களும்
தங்கும் மாடங்களும்,
விரல் சொடுக்கி வணங்கும்
சண்டிகேஸ்வரர் சன்னதியுள்ள
நீண்டப் பிரகாரமும்,
நந்தவனமும்,
தேர்முட்டியும்,
மடப்பள்ளியும்,
கோசாலையும்,
ஆழமில்லாதக் குளமும்,
எங்கிருந்துப் பார்த்தாலும்
தெரியக்கூடிய கோபுர கலசங்களும்
இல்லாத
இந்தக் குளிரூட்டப்பட்ட
கட்டிடத்தில்
அர்ச்சணைத் தட்டுடன்
நிற்கும் போது அதீத
பாரமாகத் தோளில்
கனக்கிறது -
கோயில் பார்க்காமல் வளரும்
ஒரு தலைமுறை.

No response to “Kavithai”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman